சென்னை: சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணியை வருமானவரித்துறை தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 30 வருமான வரி ஆய்வாளர்கள் மூலம் தீவிர கண்காணிப்பை தொடங்கியுள்ளோம் என்று ஐடி புலனாய்வு இயக்குநர் தெரிவித்துள்ளார். 30 ஆய்வாளர்களும் தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான பணப்பட்டுவாடாவை கண்காணிப்பர். பணப்பட்டுவாடா குறித்து கண்காணித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை தருவார்கள்.
