×

திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல சர்வே தூண்: ஆர்டிஐ கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை அளித்த பதில் வைரல்

மதுரை: திருப்பரங்குன்றத்தில் இருப்பதுதீபத்தூண் அல்ல சர்வே தூண் என்று ஆர்டிஐ கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் ேகாயில் அருகே தீபம் ஏற்றப்படும் தூணுக்கு பதில், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள நில அளவைக்கான சர்வே தூணில் தீபம் ஏற்ற பாஜ மற்றும் இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால் இது சர்வே கல் தூண் என பல்வேறு தொல்லியல் ஆதாரங்களும் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள தூண் குறித்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார் கடந்த 2022 ஜனவரியில் ஆர்டிஐ மூலம் கேட்டிருந்தார்.

இதற்கு அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய நில அளவைத்துறை அளித்துள்ள பதிலில், ‘‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல் தான். 1808-09, 1871ம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன. அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Thiruparankundram ,Survey Department of India ,Madurai ,Uchipillaiyar Kekayil ,Sikandar Dargah ,
× RELATED டிஎஸ்பியை கைது செய்யுமாறு உத்தரவு...