×

பிரிட்டிஷ் நிறுவனம், மின்வாரியம் இணைந்து தமிழ்நாட்டில் மின் சேமிப்பை மேம்படுத்த புதிய கூட்டு முயற்சி: ஆண்டிற்கு ரூ.90 கோடி வரை செலவுகளை குறைக்க திட்டம்

சென்னை: தமிழகத்தின் மின் சேமிப்பை மேம்படுத்த பிரிட்டிஷ் நிறுவனம் மற்றும் மின்வாரியம் இணைந்து புதிய கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.90 கோடி வரை செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள மின் தலைமையகத்தில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழ்நாட்டில் சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், மின் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும். ஆற்றல் சேமிப்பு திறனை உயர்த்தவும் பிரிட்டிஷ் நிறுவனம் (துரிதப்படுத்தப்பட்ட காலநிலை மாற்றங்களுக்கான கூட்டு திட்டம்) மற்றும் தமிழ்நாடு மின்வாரிய துணை நிறுவனங்களும் இணைந்து புதிய முயற்சியை தொடங்குவதற்காக கடந்த ஜூலை 23ம் தேதி மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் துவக்கநிலை கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மின் தேவை முன்னறிதல், அதிக மாறுபாடுடன் கூடிய மின் கட்டமைப்பு நெகிழ்வுத்தன்மை, மின் பகிர்மான திட்டமிடல், தொழில்நுட்ப நவீனத்துவம், தரவு பகுப்பாய்வு மற்றும் இணைய பாதுகாப்பு, தமிழ்நாட்டிற்கு தேவையான பேட்டரி ஆற்றல் சேமிப்பு திட்டங்களை அடையாளம் காணுதல், அவற்றைச் செயல்படுத்த தேவையான திட்டமிடல், தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பணிகளில் கூட்டு முயற்சிக்கான துவக்கநிலை கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இத்திட்டத்தின் முதல் கட்டம் மார்ச் 2026 வரை நடைபெற உள்ளது. இதற்காக தொழில்நுட்ப ஆலோசகராக கிராண்ட் தோர்ன்டன் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சிக்கு துணைபுரியும் வகையில், தமிழ்நாட்டில் மொத்த மின் உற்பத்தி திறனில் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் ஏறத்தாழ 55 சதவீதம் மின்கல ஆற்றல் சேமிப்பு வரை உயர்ந்துள்ளது. இந்த மாறுபடும் பசுமை எரிசக்தி ஆற்றலை மின்கட்டமைப்பில் இணைப்பதில் சவால்கள் நிறைந்திருப்பதால் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் எதிர்காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், மாநிலத்தில் 1000 மெகாவாட் மற்றும் 1500 மெகாவாட் அளவிலான புதிய பிஇஎஸ்எஸ் திட்டங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் கிடைத்துள்ளதை தெரிவித்து, இந்த முயற்சி ஆண்டுக்கு ரூ.90 கோடி வரையிலான செலவுகளை குறைக்க உதவும் எனவும் கூறப்பட்டது. 2035ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டிற்கு 13 ஜிகா வாட் அளவிலான எரிசக்தி சேமிப்பு தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த திட்டத்தின் மூலம், மாநிலத்தில் மின்கல ஆற்றல் சேமிப்பு எவ்வளவு தேவை என்பதற்கான விரிவான ஆய்வு, தமிழ்நாட்டிற்கு பொருத்தமான சேமிப்பு தொழில்நுட்பங்களை அடையாளம் காணுதல், ஆர்.இ ஒருங்கிணைப்பில் மின்கல ஆற்றல் சேமிப்பை ஏற்படுத்தும் தாக்கம் மதிப்பிடுதல், மின்வாரிய நிறுவனங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மின் கட்டமைப்பு தொடர்பான தரவுகள் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு என பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

திட்டத்தின் பயனுள்ள செயல்பாட்டுக்காக மின்வாரியம் தேவையான தரவுகள் மற்றும் நெட்வொர்க் விவரங்களை வழங்கும். பிரிட்டிஷ் நிறுவனம் மற்றும் கிராண்ட் தோர்ன்டன் குழு அவற்றை ஆய்வு செய்து பரிந்துரைகளை உருவாக்குவர். திட்ட முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைப்பு கூட்டங்கள் முறையாக நடத்தப்படும். இந்த திட்டம், எதிர்கால மின் தேவைகளுக்கான முன்னேற்பாடாக, தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் 61601 நிபுணர்கள் கருதுகின்றனர். மாநிலத்தின் எதிர்கால மின் தேவைகளை திறமையாக நிறைவேற்றஉதவியாக இருக்கும்.

Tags : Electricity Board ,Tamil Nadu ,Chennai ,Chennai… ,
× RELATED டிஎஸ்பியை கைது செய்யுமாறு உத்தரவு...