×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது: ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறும்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பயன்படுத்த தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களில் முதல் நிலை சரி பார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. பெல் நிறுவன பொறியாளர்கள் இந்த பணியை செய்து வருகின்றனர்.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரதிநிதிகள் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை இல்லாத பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது. இதன்படி பிரதிநிதிகள் இந்த பணி மேற்கொள்ளப்படும் நாட்களில் காலை 8.45 மணி முதல் மாலை 7 மணிவரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் இருக்க வேண்டும். முதல் நிலை சரிபார்ப்பு பணியின் நிறைவாக, அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது மாதிரி வாக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த பணிகள் ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறும்.

Tags : Tamil Nadu Assembly ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED ரூ.37 கோடிக்கு தனி விமானம் வாங்கி சொகுசு...