தமிழகத்தில் நாளை லோக் அதாலத் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை: மாநில சட்டப்பணிகள் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது. தேசிய சட்ட பணிகள் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லோக் அதாலத்தில் தீர்வு எட்டக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அதன்படி நாளை (13ம் தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது. இந்த லோக் அதாலத்தில் செக் மோசடி வழக்குகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள், ஜீவனாம்சம் உள்ளிட்ட குடும்பநல வழக்குகள், சிவில் வழக்குகள் என 2 லட்சத்து 12,329 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

இதற்காக உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் 504 அமர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த தகவலை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணை குழுவின் உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வழக்குகள் லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டால் அதுவே இறுதியானது. அதன் மீது எந்த நீதிமன்றத்திலும் முறையீடு ெசய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: