டெல்லி: நாட்டில் நீளமான கடற்கரை உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது. நாட்டில் மிக நீளமான கடற்கரை கொண்ட முதல் மாநிலம் குஜராத்; 1068 கி.மீ. நீளமான கடற்கரையுடன் தமிழ்நாடு 2வது இடம்; ஏற்கனவே மிக நீளமான கடற்கரை மாநில பட்டியலில் 2வது இடத்தில் இருந்த ஆந்திரா 3வது இடத்துக்கு சென்றுவிட்டது; கடற்கரைகளை அண்மையில் ஒன்றிய அரசு அளவீடு செய்தது குறித்து மாநிலங்களவையில் அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.
