டெல்லி: கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மக்களவையில் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சாம்பியனாக திகழ்ந்தவர் கலைஞர்; சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கலைஞர் சாம்பியன்; கலைஞருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
