டெல்லி: மகாகவி பாரதியாரின் கவிதைகள், சிந்தனைகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியார் 1882ம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவரது 144வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பாரதியாரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை என குறிப்பிட்டிருந்தார்.
