- விஜய்
- கஸ்தூரி கலை
- ஆம்பூர்
- ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம்
- பாஜக
- கஸ்தூரி
- மதுரை உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- சுவாமிநாதன்
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நேற்று பாஜவின் கலை கலாச்சார பிரிவின் நிர்வாகி நடிகை கஸ்தூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுரை நீதிமன்ற நீதியரசர் சுவாமிநாதனுக்கு அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். நடிகர் விஜய் எழுதி கொடுத்ததை பேசி வருகிறார். எழுதி கொடுத்தவங்க இன்னும் விவரமாக தகவல்களை சேகரித்து தர வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த முதலமைச்சர் கனவில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் பெயரை அவர் சொல்லவில்லை. ஏன் சொல்லவிலை என தெரியவில்லை. ரேஷன் கடை இல்லன்னு சொல்லி இருக்கார். எழுதி கொடுத்தவங்க அதை தெளிவுபடுத்தி இருக்கணும். அதிமுக ஆரம்பித்த நிலையில், புதுச்சேரிக்கு முன்னர் திண்டுக்கல்லில் நடந்த இடைதேர்தலில் எம்ஜிஆர், மாயதேவரை போட்டியிட செய்து வெற்றி பெற்றார். ஈரோடு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தவெக ஏன் வாய்ப்பு இருந்தும் போட்டியிட்டு பலத்தை நிருபிக்கவில்லை?.இவ்வாறு அவர் கூறினார்.
