×

தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரம்

ஊட்டி: ஊட்டி தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் மூலிகை தாவரங்கள், தேயிலை நாற்றுக்கள், மரக்கன்றுகள் மற்றும் பல்வேறு வகையான அழகு தாவரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் அழகு தாவரங்கள் இதே பூங்காவில் பல்வேறு இடங்களிலும் கோடை சீசனின் போது நடவு செய்யப்படுகிறது. இது தவிர பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு வகையான அழகு செடிகள் தற்போது தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இவைகளை நாள்தோறும் பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அழகு தாவரங்கள் தயாரானவுடன் இவைகள் பூங்காவில் நடவு செய்வது மட்டுமின்றி விற்பனை செய்யப்பட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags : Dodtapetta Tea Garden ,Ooty ,Dodtapetta ,Tea Garden ,Horticulture Department ,Nilgiris ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம்...