×

மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கனிமவள கொள்ளை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக கனிமவள ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமவள ஆணையர் மோகன் நேரில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதிகள், தமிழ்நாட்டில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கனிமவள ஆணையர், மணல் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆன்லைன் பதிவு முறை, ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், மணல் கொள்ளையை இப்படியே அனுமதித்தால் அது பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும். மணல் கொள்ளையை தடுப்பதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை. எனவே, மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமவள ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Tags : Tamil Nadu government ,High Court ,Chennai ,Madras High Court ,S.M. Subramaniam ,C. Kumarappan.… ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு 12 – 14ம்...