கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி; 50 பேர் காயம்

கோவா: வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த இடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மற்றும் மாநில தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிர்ச் பை ரோமியோ லேன் என்ற இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு பேரின் அடையாளங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் விபத்தில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்திருந்தாலும், மீதமுள்ளவர்கள் மூச்சுத் திணறலால் இறந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு அம்மாநில முதலமைச்சர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். விடுதி தீ பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் விடுதி நிர்வாகத்திற்கு எதிராகவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் கூறினார்.

கோவாவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்திடம் கேட்டறிந்தார். அப்போது ​​இந்த தீ விபத்து “மிகவும் வருத்தமளிக்கிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.

“கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories: