ஒன்றிய அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்: விவசாயிகள் வேதனை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஒன்றிய நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமானதைக் கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர். மதுராந்தகம் அருகே உள்ள தண்டரை கிராமத்தில் ஒன்றிய அரசின் நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5000 நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன்மீது தார்பாய் எதுவும் போடப்படாமல் திறந்தவெளியில் இருந்தன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நெல்மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்தது. மேலும், நெல் மூட்டைகள் முளைத்து கிடப்பதைக் கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையத்தில் நெல் கொள்முதல் கடந்த மாதம் 30ம் தேதி வரை நடந்தது. கொள்முதல் நிலையம் மூடப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் நெல் மூட்டைகளை பாதுகாப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் தற்போது பெய்த மழையில் நனைந்து மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்து வீணாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: