அரியலூர், டிச.3: அரியலூர் மாவட்டத்தில் வருகிற 5ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வருகிற 5ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. என மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
