குன்னம், டிச.1: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் கட்டிட அனுமதி வேண்டி அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகின்றனர். கடந்த ஒரு வருட காலமாக பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் அரும்பாவூர் செயல் அலுவலர் பொறுப்பு வகிக்கிறார். இவர் பல்வேறு பணிகள் காரணமாக வாரத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே வந்து செல்வதால் பணிகள் முடங்கி விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெரும்பாலான மக்கள் ஆளும் கட்சியை ஆதரிக்கிறோம் ஆனால் எங்கள் ஊர் சம்பந்தமான குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க மனுக்கள் கொடுக்க பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றால் அங்கு பொறுப்பாக பதில் சொல்வதற்கு யாரும் இல்லை.
