அரியலூர்,டிச.1: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 592 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகள் நேற்று வழங்கப்பட்டது.
திருமானூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமழாப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குருவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, காமரசவல்லி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டமன்றத் உறுப்பினர் சின்னப்பா, 592 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன், திமுக ஒன்றிய செயலாளர்கள் கென்னடி , அசோக் சக்கரவர்த்தி, முருகன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ரமேஷ் பாபு, பிச்சப்பிள்ளை மற்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
