கரூர்- திருச்சி சாலை ஓரத்தில் இடிந்து விழும் நிலையில் மேல் நீர்தேக்க தொட்டி

 

கரூர், டிச.2: கரூர்- திருச்சி சாலை ஓரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல் நீர்தேக்க தொட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கரூர் காந்திகிராமம் அடுத்து உள்ள, ரயில்வே மேம்பாலத்தை கடந்த பின்னர், இடது பகுதியில், திருச்சி பிரதான சாலையின் ஓரத்தில் (சனப்பிரெட்டி ஊராட்சிக்கு) உட்பட்ட மேல் நீர்தேக்க தொட்டி சிதிலமடைந்தும், கான்கிரீட்டுகள் மிகவும் பழுதடைந்தும் காணப்படுகிறது.

மேலும் மேல்நிலை நீர்த்து தேக்க தொட்டிகள் எப்போதும் தண்ணீர் இருப்பதால் உள்ளே இருக்கும் இரும்பு எளிதில் துரு பிடித்து விடும் தன்மை உண்டு. தற்போது உள்ள நிலையில் பயன்பாடு இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Related Stories: