அரவக்குறிச்சி, நவ.26: மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கைக்காய் கிலோ ரூ.300க்கு விலையில் விற்கப்பட்டு விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக முருங்கை வளர்ப்பு உள்ளது. அரவக் குறிச்சி முருங்கைக்காய்க்கு எப்போதும் தட்டுப்பாடு இருக்கும். சுற்று வட்டாரத்தில் பல்லாயிரக்கணக் விவசாயிகள் முருங்கை விவசாயத்தில் மட்டும் ஈடுபட்டுள்ளனர். முருங்கையை பொறுத் தவரை 9 மாத சீசனாகவும், 4 மாதம் சீசன் குறைந்தும் காணப்படும். சீசன் காலங் களில் முருங்கைக்காய் வரத்து அதிகமாக இருக் கும்போது விலை குறைந்தே இருக்கும்.
அதுவே சீசன் இல்லாத காலங்களில், அதாவது வரத்து குறை இருக்கும்போது விலை சற்று அதிகமாகும்சுற்று வட்டார பகுதி களில் இப்போது முருங்கை மரங்களில் 3 பிஞ்சுகள் குறைந்தும், பல மரங்களில் பிஞ்சுகள் இல்லாமலும் உள்ளன.எனவே கமிஷன்மண்டி களுக்கு முருங்கைக்காய் வரத்து மிக அரிதாக உள் ளது. இதனால் அங்கு ஏலத்திற்கு வரும் முருங்கைக் காய் விலை உயர்ந்துள்ளது.கடந்த மாதம் கரும்பு ரக முருங்கைக்காய் கிலோ ரூ.60-70 வரையிலும், நெட்டு ரக முருங்கைக்காய் கிலோ ரூ.40-50 வரையிலும் விலை இருந்தது.ஒரு மாதத்தில் நேற்றைய நிலவரப்படி கரும்பு ரக முருங்கைக்காய் கிலோ ரூ.260 – 300 வரையிலும், நட்டு ரக முருங்கைக்காய் கிலோ ரூ.180 வரையிலும் விற்பனை விலை இருந்தது.
இதுதவிர, சில்லறை விற்பனையில் ஒரே ஒரு முருங்கைக்காயின் விலை 20-25 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. விலை ஒருபுறம் இருந்தாலும், ஏல மண்டி களுக்கு வரும் முருங்கைக் காய் வரத்து மிக குறை வாக உள்ளது.இப்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீதமுள்ள கொஞ்ச நஞ்ச பிஞ்சுகளும் தொடர் மழையால் உதிர்வு ஏற் படும்பட்சத்தில் முருங்கை உற்பத்திக்கு கூடுதல் காலம் பிடிக்கலாம்.அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கமிஷன் மண்டிகளில் மேற்கண்ட ஏல விலை உள்ள நிலையில், அரவக் குறிச்சியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள மூலனுார் மண்டிகளில் விலை எகிறி காணப்படுகிறது.அதன்படி 1 கிலோ 600 முருங்கைக்காய் ரூபாய் அளவுக்கு போகிறது. கடும் விலை காரணமாகவும், முருங்கைக்காய் அரிதாகி விருங்கை நிலை காரணமாகவும், முருங்கை காயை திருட வேண்டாம்னு சொல்லல… கிளையை ஒடிக்காமல் திருடவும். 2 காய் மட்டும் திருடவும் என்ற மீம்ஸ்களும் சமூக வலைதளங்க ளில் வலம் வருகின்றன.
