நகர சாலை வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும்

 

கரூர்,டிச.2: கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனூர் உட்பட பல்வேறு உட்புற தெரு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில பகுதிகளில் அதன் மீது வர்ணம் பூசாத காணரத்தினால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வர்ணம் பூசப்படாத வேகத்தடைகளில் வேகமாக சென்று விபத்துக்கும் உள்ளாகி வருகின்றனர்.

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூச தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற பகுதிகளை பார்வையிட்டு வேகத்தடைகளின் மீது வர்ணம் பூச தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: