சத்துணவுக்கூடம் திறப்பு விழா

மல்லசமுத்திரம், டிச.2: எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.7.56 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்ட புதிய சத்துணவுக்கூடம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தங்கவேல் புதிய கட்டடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் சீனிவாசன், கைலாசம், ஐயப்பன், சாமி, பொன்னுசாமி, இளைஞரணி சத்யராஜ், சுதர்சன், ஆனந்த் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், பள்ளி தலைமை ஆசிரியை கீதா, மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: