குமாரபாளையம், நவ.29: சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி மொண்டிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (75). இவரது மனைவி சேவத்தாள். மாரியப்பன் பவானியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சுமைப்பணி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 25ம்தேதி காலை வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. வேலை அதிகமுள்ள நாட்களில் பவானியிலே தங்குவதை வழக்கம் என்பதால், வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடவில்லை. இதனிடையே, கடந்த 27ம்தேதி காலை, குமாரபாளையம் பழைய பாலம் பகுதியில், சாலையை கடந்த மாரியப்பன், அந்த வழியாக வந்த களியனூர் வெள்ளப்பாறையை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் என்பவரின் டூவீலர் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே மாரியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய குமாரபாளையம் போலீசார், விபத்தை ஏற்படுத்திய டூவீலரை ஓட்டி வந்த வெள்ளப்பாறையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.
டூவீலர் மோதி முதியவர் பலி
- Duweiler
- குமாரபாளையம்
- Mariyappan
- வெள்ளரி வெள்ளி மொண்டிகோட்டை பிராந்தியம், சேலம் மாவட்டம், இடிபியாடி
- ஸ்வெத்தா
- பவானி
