×

வில்வித்தை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு

தஞ்சாவூர், அக் 9: வில்வித்தை போட்டியில் தஞ்சை சேர்ந்த மாணவர்கள் சென்னையில நடந்த மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில் தேர்வு பெற்ற மாணவர்கள் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான எஸ் ஜி எஃப் ஐ வில்வித்தை போட்டியில் தஞ்சை சேர்ந்த மாணவர்கள் கைலாஷ், பிரகனீஷா ஆகியோர் பங்கேற்று வெற்றிபெற்றனர். மேலும் தேசிய அளவிலான 69வது வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு அணிசார்பாக தேர்வாகியுள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர் எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கர்ணன், பயிற்சியாளர்கள் வீரமுத்து, விஜய், காவியன் உடன் இருந்தனர்.

Tags : MLA ,Thanjavur ,Chennai ,D.K.G. Neelamegam ,Chennai… ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...