×

காவல்துறை தீவிர ஏற்பாடு தேசிய தொழிலாளர் கொள்கையை வெளியிடகோரி ஏஐடியூசி மாவட்டக் குழு ஆர்ப்பாட்டம்

கரூர், அக்.9: தேசிய தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி கரூரில் ஏஐடியுசி மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேசிய தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி கரூர் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி கரூர் மாவட்டகுழு தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வடிவேலன் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். நிர்வாகிகள் ரத்தினம், கலாராணி,, நாட்ராயன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். தேசிய தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும் எனபன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : AITUC district committee ,Karur ,AITUC Karur district committee ,
× RELATED கரூர் அரசு மருத்துவமனை அருகே...