×

நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த புகாரில் 4 பேர் கைது!

சென்னை: நடிகர் சூர்யாவின் பாதுகாவலர் அந்தோணி ராஜிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சூர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த சுலோச்சனா அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்தது அம்பலமானதையடுத்து போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Tags : Surya ,Chennai ,Anthony Raj ,Sulochana ,Balaji ,Baskar ,Vijayalakshmi ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...