×

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை திட்டம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் வருகைக்கான காரணம், எங்கு உள்ளனர், வாழ்க்கை நிலை, சுகாதார நிலை, என்ன பணி செய்கின்றனர் என்பது குறித்து அனைத்து மாவட்டங்களில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,Labour Welfare Department ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...