- பிரிவினைவாத அட்டூழியங்கள் நினைவு தினம்
- ஜின்னா
- காங்கிரஸ்
- மவுண்ட்பேட்டன்
- இந்தியா
- என்சிஇஆர்டி
- புது தில்லி
- கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தேசிய கவுன்சில்
புதுடெல்லி: தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலானது பிரிவினைவாத கொடூர நினைவு தினத்தை குறிக்கும் வகையில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை (நடுநிலை) மற்றும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான (மேல்நிலை) பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு துணைப் பாட புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த பாடப்புத்தகத்தில் பிரிவினை பயங்கர நினைவு தினத்தை கடைப்பிடிப்பதை அறிவிக்கும் பிரதமர் மோடியின் 2021ம் ஆண்டு செய்தியுடன் தொடங்குகின்றன. இந்த புத்தகத்தில், ‘’பிரிவினைக்கு பிறகு காஷ்மீர் ஒரு புதிய பிரச்னையாக உருவெடுத்தது.
இது இந்தியாவில் இதற்கு முன் இருந்திராத வகையில், வெளியுறவு கொள்கைக்கு ஒரு சவாலை உருவாக்கியது. சில நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவி அளித்து காஷ்மீர் பிரச்னையின் பெயரில் இந்தியா மீது அழுத்தம் கொடுக்கின்றன. இந்தியாவின் பிரிவினை தவறான கருத்துக்களால் ஏற்பட்டது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா பிரிக்கப்பட்டது. ஆனால் இது எந்த ஒரு தனி நபரின் செயலும் அல்ல. இந்திய பிரிவனைக்கு மூன்று கூறுகள் காரணமாகஇருந்தது. அதைக்கோரிய ஜின்னா, அதனை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், மூன்றாவதாக அதனை செயல்படுத்திய மவுண்ட்பேட்டன். ஆனால் மவுண்ட்பேட்டன் ஒரு பெரிய தவறு செய்தது நிரூபிக்கப்பட்டது.
அதிகார மாற்றத்துக்கான தேதியை 1948ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு அவர்முன்கூட்டியே ஒத்திவைத்தார். அனைவரையும் இதற்கு சம்மதிக்க வைத்தார். இதன் காரணமாக பிரிவினைக்குமுன் முழுமையான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. பிரிவினை எல்லைகளை நிர்ணயிப்பதும் கூட அவசர அவசரமாக செய்யப்பட்டது. அதற்காக 5 வாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின் இரண்டு நாட்களுக்கு பிறகும் லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் இருந்தியாவில் இருக்கிறோமா, பாகிஸ்தானில் இருக்கிறோமா என்று தெரியாமல் இருந்தனர். இவ்வளவு அவசரம் என்பதுஒரு பெரிய கவனக்குறைவு செயலாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
