×

நீதிமன்றத்தில் கண்காட்சி

சிவகங்கை, ஆக.11: சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி துவக்கி வைத்து வருவாய் துறை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 15 நபர்களுக்கு ரூ.1,65,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்கள் குறித்த கையேடுகள் வழக்கறிஞர்கள், மாணவ,மாணவிகள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி, மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், குடும்ப நல நீதிபதி பசும்பொன் சண்முகையா, தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் செந்தில்முரளி, சார்பு நீதிபதி பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், சட்ட உதவி பாதுகாப்பு அலகு பணியாளார்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Sivaganga ,District Legal Services Commission ,Sivaganga Integrated Court ,Complex ,Principal District ,Judge ,Arivoli ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை