×

தஞ்சை- நாஞ்சிக்கோட்டைக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்

தஞ்சாவூர், ஆக 7: தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை அடுத்த சூரியம்பட்டி, வேங்கராயன் குடிகாடு, கொல்லாங்கரை நடுவூர், மருங்குளம், குருங் குளம், ஏழுப்பட்டி, வாகரகோட்டை, ஈச்சங்கோட்டை, செல்லம்பட்டி, பொய்யுண்டார் கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருப்பவர்களின் வசதிக்காக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இருப்பினும் அந்த பகுதியில் வசிக்கும் மாணவர்கள் தஞ்சையில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் தஞ்சைக்கு வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதும். குறிப்பாக டவுன் பஸ்களில் நிற்பதற்கே இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.

காலை, மாலை நேரத்திலும் மேற்கண்ட பகுதிக்கு செல்லும் பஸ்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயணிப்பதால் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Thanjavur ,Nanjikottai ,Thanjavur district ,Suriyampatti ,Venkarayan Kudikadu ,Kollangarai Naduur ,Marungulam ,Kurungkulam ,Ezhupati ,Vagarakottai ,Eechangottai ,Chellampatti ,Poiyundar Kottai ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை