- சென்னை
- மோகன்.ஜி
- ரிச்சர்ட் ரிஷி
- நட்டி நடராஜ்
- ரக்ஷனா இந்துசூடன்
- ஒய்.ஜி.மகேந்திரன்
- வேலா ராமமூர்த்தி
- சிராக் ஜானி
- ஜிப்ரான் வைபோதா
- வீரவல்லா
- வீரசிம்ம காடவராயர்
சென்னை: ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’, ‘பகாசூரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து மோகன்.ஜி எழுதி இயக்கியுள்ள படம், ‘திரௌபதி 2’. ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ரக்ஷணா இந்துசூடன், ஒய்.ஜி.மகேந்திரன், வேல.ராமமூர்த்தி, சிராக் ஜானி நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். படத்தின் வெளியீடு தொடர்பாக மோகன்.ஜி வெளியிட்டுள்ள பதிவில், ‘இப்படம் நமது மண்ணின் வரலாறு. வரலாற்றில் பதிவானவற்றை இத்தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக திரையில் பதிவு செய்துள்ளோம். மூன்றாம் வீரவல்லாள மகாராஜரும், வீரசிம்ம காடவராயரும் இணைந்து, வரும் பொங்கல் தினத்தன்று திரைக்கு வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

