- கீது மோகந்தாஸ்
- பெங்களூர்
- கீது மொகந்தாஸ்
- நயன்தாரா
- கியாரா அத்வானி
- ஹுமா குரேஷி
- ருக்மணி வாசந்த்
- தாரா சுதரியா
- ராயா
- யாஷ்
பெங்களூரு: மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பிரமாண்ட மான முறையில் உரு வாகும் பான் வேர்ல்ட் படம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’. முக்கிய வேடங்களில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா நடிக்கின்றனர். படத்தில் அவர்கள் ஏற்றுள்ள கேரக்டர் அறிமுக போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
யஷ் நடிக்கும் ராயா என்ற கேங்ஸ்டர் கேரக்டருக்கான அறிமுக வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவில் நெருக்கமான காட்சிகள் இடம்பெற்று இருந்ததை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை யஷ் இதுபோன்ற காட்சியில் நடித்தது இல்லை. இதனால், கடந்த 3 நாட்களாக கீது மோகன்தாஸை பல்வேறு தரப்பினர் தங்கள் சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவருக்கு ஆதரவாக சில இயக்குனர்களும், நடிகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இயக்குனர் ராம் கோபால் வர்மா கூட, ‘கீது மோகன்தாஸ் பெண்கள் இனத்தின் ஒரு குறியீடு’ என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் கீது மோகன்தாஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘இதுபோன்ற நேரத்தில் கூலாக இருக்க முடிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு, தனக்கு வரும் எதிர்ப்புகளை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பதை சொல்வது போல் இருக்கிறது என்று நெட்டிசன்களும், ரசிகர் களும் கூறியுள்ளனர்.

