தமிழில் தனுஷ் ஜோடியாக ‘அனேகன்’ என்ற படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் அமைரா தஸ்தூர். பிறகு இந்தியில் மட்டுமே கவனம் செலுத்திய அவர், 2023ல் ரிலீசான ‘பஹிரா’ என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தார். ‘தாண்டவ்’, ‘பம்பாய் மேரி ஜான்’ ஆகிய இந்தி வெப்தொடர்களில் நடித்தார். தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதாக பில்ட்-அப் கொடுக்கிறார். தினமும் தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், அடிக்கடி கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் இணையதளங்களில் வைரலானது. அதில், டிரெண்டி உடையில் அமைரா தஸ்தூர் விதவிதமாக போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார். ஏனோ அவருக்கு தமிழில் மீண்டும் புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

