×

சிரஞ்சீவிக்கு தடை போட்ட இயக்குனர்

அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, வெங்கடேஷ் நடித்துள்ள `மன சங்கர வர பிரசாத் காரு’ என்ற படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இதுகுறித்து சிரஞ்சீவி பேசுகையில், ‘இயக்குனர் கே.ராகவேந்திர ராவ் ஒரு விஷயத்தை சொன்னார். `அனில் ரவிபுடி படங்களை பார்க்கும்போது, அவருடன் இணைந்து நீங்கள் பணிபுரிந்தால், அந்த கூட்டணி அற்புதமாக இருக்கும்’ என்றார். அவரது ஆசைப்படி இப்படம் உருவானது. ‘சங்கராந்திகி வஸ்துனம்’ என்ற படத்துக்கு பிறகு அனில் ரவிபுடி என்னிடம் கதை சொன்னபோது, ’ஒரு குடும்ப படமாக, உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இதில் காமெடியும் கலந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதில் எனக்கு எஸ்பிஜி கதாபாத்திரம். மாஸ் ஆக செய்வோம்’ என்றேன்.

`இல்ல சார், மாஸ் வேண்டாம். ஜாலியாக உங்களை ரசித்தவர்கள் இப்போது வளர்ந்து விட்டார்கள். அது இந்த தலைமுறைக்கு தெரியாது. இடையிலுள்ள எனது தலைமுறை ஆட்கள் இந்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். அதை காட்ட இப்படத்தில் முயற்சி செய்கிறேன்’ என்று சொன்னார். நானும் ஓ.கே சொன்னேன். இதில் வெங்கடேஷை கொண்டு வரலாம் என்ற யோசனையை நான்தான் சொன்னேன். நாங்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை பல வருடங்களாக இருந்தது. கெஸ்ட் ரோலில் அவர் நடித்திருக்கிறார். முழு படத்தில் நடிக்க வேண்டும் என்றால், அனில் ரவிபுடியே கதை சொல்லட்டும். நாங்கள் ரெடி’ என்றார்.

Tags : Chiranjeevi ,Anil Ravipudi ,Nayanthara ,Venkatesh ,K. Raghavendra Rao ,
× RELATED நாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்...