×

ஸ்ரீலீலா நெகிழ்ச்சி: எனது கனவை நிறைவேற்றிய பராசக்தி

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் நாளை திரைக்கு வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீலீலா நெகிழ்ச்சியுடன் அளித்துள்ள பேட்டி வருமாறு: ’பராசக்தி’ எனக்கு ஆழமான, அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரையும், மறக்க முடியாத அற்புதமான நினைவுகளையும் பரிசளித்துள்ளது. தினமும் கடினமாக உழைத்தோம்.

எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத கேரக்டரை கொடுத்ததற்கும், என்மீது வைத்த அதிக நம்பிக்கைக்கும் சுதா கொங்கராவுக்கு நன்றி. சிவகார்த்திகேயன் பெற்ற வெற்றி, வெறும் விடாமுயற்சியினால் மட்டுமே வந்தது கிடையாது, அவரது நல்ல எண்ணங்களும் அடங்கியுள்ளது. நடிகர்களிடமும், படக்குழுவினரிடமும் அவர் அன்புடன் பழகினார். ரவி மோகனின் நடிப்பு எனக்கு இன்ஸ்பிரே ஷன்.

படத்தில் அவரது நடிப்பை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். அதர்வா முரளியின் அர்ப்பணிப்பு, இன்னும் அவரை அதிக உயரத்துக்கு அழைத்துச் செல்லும். நான் நடனமாடிய பல பாடல்களில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்த ‘ஆர்யமாலா’ பாடலுக்கு என் மனதில் எப்போதும் ஒரு இடம் இருக்கும். ’பராசக்தி’ வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி.

இப்படம் கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத் தில், ஜி.வி.பிரகாஷ் குமார் சார் இசை அமைத்துள்ள 100வது படத்தில், ஹீரோ ரவி மோகன் வில்லனாக நடிக்கும் முதல் படத்தில், நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

Tags : Srileela Lainchi ,Chennai ,Sivakarthikeyan ,Sudha Kongara ,
× RELATED சிரஞ்சீவிக்கு தடை போட்ட இயக்குனர்