×

இயக்குனரை ‘டா’ போட்டு பேசும் கீர்த்தி சுரேஷ்

காதலர் ஆண்டனியை திருமணம் செய்த கையோடு தனது இந்தி படமான ேபபி ஜான் திரைப்படத்தின் புரமோஷன்களில் தீவிரமாக பங்கேற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தொடர்பாக ரசிகர்கள் பலர் நயன்தாராவை ட்ரோல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதில் பாருங்க, உங்க பட புரமோஷன்களுக்கு நீங்க வர்றதில்ல. ஆனால், கீர்த்தி திருமணமான கையோடு தாலி கட்டிக்கிட்டு படத்தோட புரமோஷனுக்கு வந்திருக்கார் என்றெல்லாம் கமென்ட் போட்டு நயன்தாராவை கடுப்பேற்றினார்கள். இப்போது பேபி ஜான் படத்தின் புரமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் துபாய் சென்றார்.

அங்கே படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் அட்லி, தனது மனைவி பிரியாவுடன் வந்திருந்தார். ஓட்டல் ஒன்றில் கீர்த்தியும் பிரியாவும் சேர்ந்து நிற்க அதையெல்லாம் தனது மொபைலில் படபடவென கிளிக் செய்துகொண்டிருந்தார் அட்லி. போட்டோக்கள் எடுத்து முடித்ததும் நேராக அட்லியிடம் வந்த கீர்த்தி சுரேஷ், எங்கே போட்டோவை காட்டு என மொபைலை பார்த்தார். அட்லி எடுத்திருந்தது எல்லாமே வீடியோவாம். கடுப்பான கீர்த்தி, என்னடா போட்டோ எடுக்கச் சொன்னா வீடியோ எடுத்து வச்சிருக்கே? என சொல்லியிருக்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.

என்னம்மா டைரக்டரை அதுவும் இந்த படத்தோட புரொடியூசரை டா போட்டு பேசுற என ரசிகர்கள் கீர்த்தியை பார்த்து கேட்கிறார்கள். கீர்த்தி சுரேஷ், அட்லி, அவரது மனைவி பிரியா ஆகிய 3 பேரும் நெருங்கிய நட்பில் இருப்பவர்கள். இவர்கள் டா போட்டு பேசுவதுதான் வழக்கமாம்.

Tags : Keerthy Suresh ,Antony ,
× RELATED திருமணம் முடிந்த நிலையில் பார்ட்டி:...