×

கூரனுக்கு வரி விலக்கு; மேனகா காந்தி வேண்டுகோள்

சென்னை: ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

டிசம்பர் 27ம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ‘கூரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி பேசியது: இது பெரிய கருத்தை, சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது. எஸ். ஏ. சந்திரசேகர் இந்தப் படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விலங்கு நல இயக்க மக்களையும் இதைப் பார்க்கச் சொல்கிறேன். படம் வெளியானதும் அரசு வரி விலக்கு தர வேண்டும்.

Tags : Maneka Gandhi ,Chennai ,S.A. Chandrasekhar ,Y. G. Mahendran ,Sathyan ,Balaji Sakthivel ,George Marian ,Indraja Robo Shankar ,Nithin… ,
× RELATED கூரன் பட விழாவுக்காக சென்னை வந்த மேனகா காந்தி