லண்டன்: உலக சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய ‘இன்செப்ஷன்’, ‘தி டார்க் நைட் ரைசஸ்’, ‘இண்டெர்ஸ்டெல்லர்’, ‘டெனெட்’ உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கடைசியாக ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தை இயக்கியிருந்தார். கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவியும் தயாரிப்பாளருமான எம்மா தாமஸ் ஆகியோருக்கு இங்கிலாந்தில் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அந்நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில், இவர்களுக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார். இந்த பட்டம் சமூகத்தில் கலை, அறிவியல், தொண்டு மற்றும் பொது சேவை உள்ளிட்ட துறைகளில் அளப்பரியான பங்களிப்பை அளித்த நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது பார்க்கப்படுகிறது. இந்த பட்டம் பெற்றவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ‘சர்’ என போட்டுக்கொள்வர்.