×

படம் பிடிக்காமல் பாதியில் சென்றால் 50% டிக்கெட் கட்டணம் தந்தால் போதும்: பிவிஆர் அறிவிப்பு ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்

மும்பை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 19 சதவீதமும், கொரோனா பரவலுக்குப் பிறகு 25 சதவீதமும் குறைந்துவிட்டது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஓடிடி தளங்கள் பெருகிவிட்ட நிலையில், தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. படம் பார்க்க டிக்கெட்டை ரிசர்வ் செய்துவிட்டு தியேட்டருக்கு சென்றால், அப்படம் நன்றாக இல்லை என்றாலும், வேறுவழியின்றி அப்படத்தை பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. காரணம், மக்கள் செலுத்திய டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்காது என்பதுதான்.

ஆனால், தற்போது பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தாவது, தியேட்டரில் ஒரு படத்தை ரசிகர்கள் எவ்வளவு நேரம் பார்க்கிறார்களோ, அந்தளவுக்கு மட்டுமே டிக்கெட் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற புதிய முறையை பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரசிகர்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்றால், பாதியிலேயே எழுந்து வெளியே சென்றுவிடலாம்.

எந்தளவுக்கு படம் பார்க்கிறார்களோ அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் செலுத்தினால் போதும். தற்போது டெல்லி என்சிஆர் பகுதியில் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுபற்றி பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரெனாட், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘டிக்கெட் ரிசர்வ் செய்பவர்கள், வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக 10 சதவீதம் கொடுத்து டிக்கெட்டை ரிசர்வ் செய்ய வேண்டும்.

ஏஐ கேமரா மூலம் தியேட்டரில் இருப்போர் கண்காணிக்கப்படுவார்கள். ரசிகர்கள் புக் செய்யும் டிக்கெட், அவர்களின் இருக்கையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் யார் உள்ளே இருக்கிறார்? ஒருவர் எப்போது உள்ளே வருகிறார், எப்போது வெளியே செல்கிறார் என்று அனைத்தையும் கண்காணிப்போம். ரசிகர்கள் எப்போது வெளியேறுகிறார்கள் என்பதை வைத்து, அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் கணக்கிடப்படும்’ என்றார்.

ஒரு ரசிகர் 50 சதவீத படத்தை மட்டுமே பார்த்தால், அவருக்கு 50 சதவீத டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும். 25 முதல் 50 சதவீதம் படம் மீதி இருந்தால், 30 சதவீதம் டிக்கெட் தொகை திருப்பி தரப்படும். 50 சதவீதத்துக்கு மேல் படம் இருந்தால், 60 சதவீதம் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நகரங்களில் அறிமுகப்படுத்தி, பிறகு அதை படிப்படியாக விரிவுபடுத்த பிவிஆர் ஐநாக்ஸ் முடிவு செய்துள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு லேட்டாக சென்றாலும் இத்திட்டம் பயன்படும்.

டிராபிக் ஜாம் உள்பட சில காரணங்களால், ஆரம்பத்தில் வரும் 30 நிமிடங்களை ரசிகர்கள் தவறவிட்டு விட்டார்கள் என்றால், அதற்கான கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. குறிப்பிட்ட 30 நிமிட நேரம் மட்டுமே தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அதை மட்டும் பார்த்துவிட்டு, அதற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். அதாவது, எவ்வளவு நேரம் தியேட்டருக்குள் இருக்கிறோமோ, அதற்கு தகுந்த மாதிரி டிக்கெட் கட்டணம் செலுத்தினால் போதும்.

* ஒரு ரசிகர் 50 சதவீத படத்தை மட்டுமே பார்த்தால், அவருக்கு 50 சதவீத டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும்.

* முதல் 50 சதவீதம் படம் மீதி இருந்தால், 30 சதவீதம் டிக்கெட் தொகை திருப்பி தரப்படும்.

* சதவீதத்துக்கு மேல் படம் இருந்தால், 60 சதவீதம் திருப்பி தரப்படும்.

Tags : PVR ,Mumbai ,Corona ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!!