×

ஹீரோவாக கருணாகரன் நடிக்கும் ‘ குற்றச்சாட்டு‘ !

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க காமெடி நடிகராக வலம் வருபவர், கருணாகரன். பல துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு பெரிய புகழை தேடித்தந்தது இவரது முதல் படமான, சூது கவ்வும்‘ படம்தான். இந்த படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமி குறும்படத்திற்காக அவரை சந்தித்த போது, இவருக்கு பட வாய்ப்பு கிட்டியது. தற்போது, ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்ற நடிகராக விளங்கி வருகிறார். தொடர்ந்து ‘ பீட்சா‘,‘ஜிகர்தண்டா‘, ‘ லிங்கா‘, ‘ இறைவி‘, என 70க்கும் மேலான படங்களுடன் தனக்கான தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தற்போது இவர் கதையின் நாயகனாக நடிக்க எமோஷனல் ஃபேமிலி டிராமா திரில்லராக உருவாகியுள்ளது ‘குற்றசாட்டு’ படம். இந்தப் படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார். மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். தவிர, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். கதையின் நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வரக்கூடிய நடிகர் கருணாகரன் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள் பரத், தினேஷ் பிரபாகர், முன்னா சைமன், ரியாஸ் கான், ஷிவானி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவை தவிர மிஸ் யூ, திரு. மாணிக்கம், சூர்யாவின் 44வது படம் என தொடர்ந்து கருணாகரன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Tags : Karunakaran ,Nalan Kumaraswamy ,
× RELATED சூது கவ்வும் 2 – திரைவிமர்சனம்