×

டீப்பேக் வீடியோ வைரல் எந்த பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாது: பிரக்யா நாக்ரா உருக்கம்

சென்னை: தமிழில் ஜீவாவுடன் ‘வரலாறு முக்கியம்’, மைக்கேல் தங்கதுரையுடன் ‘என் 4’, மலையாளத்தில் ‘நதிகளில் சுந்தரி யமுனா’, தெலுங்கில் ‘லக்கம்’ ஆகிய படங்களில் நடித்தவர், பிரக்யா நாக்ரா. நாள்தோறும் சமூக வலைத் தளங்களில் வீடியோ, போட்ேடாக்களை வெளியிட்டு சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவரது டீப்பேக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பிரக்யா நாக்ரா உருக்கத்துடன் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:எனக்கு இன்னும் ஏதோ ஒரு கெட்ட கனவில் இருப்பது போல் இருக்கிறது.

டெக்னாலஜி நம் வாழ்க்கையை மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டதே தவிர, இப்படி நாசமாக்குவதற்காக அல்ல. ஏஐ மூலம் இதுபோன்ற செயல்களில் ஈடுபவர்களைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் நான் மன உறுதியுடன் இருக்க முயற்சி செய்கிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்து, எனக்கு பக்கபலமாக நின்ற அனைவருக்கும் நன்றி. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்.

Tags : Pragya Nagra ,Chennai ,Jeeva ,Michael Thangadurai ,
× RELATED பிரக்யாவின் ஆபாச வீடியோ காட்சி லீக்?: இணையதளத்தில் அதிர்ச்சி