×

சூர்யா 45 படப்பிடிப்பு துவக்கம்

சென்னை: சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு கோவையில் இன்று தொடங்குகிறது. முன்னதாக இப்படத்துக்கான துவக்க விழா பூஜையுடன் நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி எழுதி, இயக்கும் இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அமானுஷ்ய சக்தி பின்னணியில் உருவாகும் பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. மவுனம் பேசியதே, ஆறு, ஆய்த எழுத்து படங்களுக்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து திரிஷா இதில் நடிக்கிறார்.

Tags : Surya 45 shooting ,CHENNAI ,Suriya ,Coimbatore ,Trisha ,AR Rahman ,RJ ,Balaji ,
× RELATED திரைப்படங்கள் வெளியான மூன்று...