×

நெருக்கமான காட்சிகளில் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ்: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: வெப்சீரிஸில் நெருக்கமான காட்சிகளில் பார்வதி திருவோத்து, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெர் என்ற வெப்சீரிஸ் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இது 4 பெண்கள் பற்றிய கதையாகும். இதில் ஊர்வசி, பார்வதி திருவோத்து, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். இதில் ஒரு காட்சியில் பார்வதி திருவோத்துவும் ஐஸ்வர்யா ராஜேஷும் நெருங்கிப் பழகுவது போலவும், இருவரும் லிப் டு லிப் கிஸ் காட்சியிலும் நடித்துள்ளனர். மேலும் இருவருக்கிடையே தொடர்பு இருப்பது போலவும் காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்கும் நடிகைகள். அவர்கள் இதுபோல் நடித்திருப்பது சரியானதல்ல. இளைய சமூகத்தை திசை திருப்புவதுபோல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த காட்சிக்கான புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்து வைரலாகிவிட்டது. இந்த காட்சி தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் கதையுடன் பார்க்கும்போது எந்த ஆபாசமும் இருக்காது என்றும் வெப்சீரிஸ் குழு கூறுகிறது.

Tags : Parvathi ,Aishwarya Rajesh ,Chennai ,Parvathi Thiruvothu ,OTD ,Urvasi ,Parvati Thiruvothu ,Ramya Nambeesan ,
× RELATED நயன்தாரா பதிவு – லைக்கை நீக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்