×

மொபைலில் நடனம் அறிமுகம் செய்த மாஸ்டர் ஷெரிப்

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான ‘அமரன்’ படத்தின் டான்ஸ் மாஸ்டர் ஷெரீப், தமிழ், தெலுங்கு உள்பட 250 படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவர் நடன பயிற்சி தரும் மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளார். விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், ‘ஷெரிப் ஒரு நடன இயக்குநர் மட்டுமல்ல; அவர் ஒரு கதைசொல்லி. நாங்கள் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது படைப்பாற்றலால் உயர்ந்து கொண்டே வருகிறது’ என்றார்.

டான்ஸ் மாஸ்டர் ஷெரிப் கூறுகையில், ‘ஆரம்பத்தில் இருந்தே நடனம்தான் என் வாழ்க்கை. நடனக் கலைஞர்கள் உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க ஒரு இடத்தை உருவாக்குவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சியாக இது இருக்கும்’ என்றார். ராஜ்குமார் பெரியசாமி, பாபி சிம்ஹா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Master ,Sheriff ,Chennai ,Sharif ,Kamal Haasan ,Karthik Subbaraj ,
× RELATED பாலின உள்ளடக்கத்திலும் கவனம்...