×

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரியங்கா மோகன்

ஐதராபாத்: பிரியங்கா மோகன் கூறியது:‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் நிகழ்ச்சியில் நான் பேசியதை பலரும் தவறாக புரிந்துகொண்டார்கள். இப்போது நான் பவன் கல்யாண் நடிக்கும் ‘ஓஜி’ படத்தில் நடித்து வருகிறேன். அதனால் அன்று மேடையில் ஏறியதும் ‘ஓஜி’ என்று கத்த ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யாவும் இருந்தார். ஏற்கனவே ‘குஷி 2’ படத்தில் பிரியங்காவைத்தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்திருந்தார்.

அது அப்போது நியாபகம் வந்தது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இருந்ததால்தான் குஷி 2 படத்தில் பவன் கல்யாண் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் உண்மையில் நான் முதலில் பார்த்தது விஜய் நடித்த குஷி படத்தைத்தான். அந்தப் படத்தை பார்த்துவிட்டு நான் விஜய் ரசிகை ஆகிவிட்டேன். விஜய்யின் நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும். அதுவே அன்று நான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்திருந்தால் விஜய் என்றுதான் சொல்லியிருப்பேன். இதற்காக விஜய் ரசிகர்கள் என்னை திட்ட வேண்டாம். அவர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags : Priyanka Mohan ,Vijay ,Hyderabad ,Pawan Kalyan ,
× RELATED மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ:...