சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பட நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை. நாங்கள் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக யாராவது தொடர்பு கொண்டால் அதை நம்ப வேண்டாம். ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாத்துறை நிலை என்ன?: நவம்பர் 1 முதல் ஸ்டிரைக்
சென்னை: நவம்பர் 1ம் தேதி முதல் தமிழ் சினிமா துறையில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால் சினிமாத் துறை நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர்கள் சம்பளம் குறைக்க வேண்டும், டெக்னீஷியன்கள், தொழிலாளர்களின் சம்பளத்தை முறைப்படுத்த வேண்டும், ஒரு படத்துக்கு ஆகும் வீண் செலவுகளை களைய வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி, நவம்பர் 1ம் ேததி முதல் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்படும், படம் தொடர்பான நிகழ்ச்சிகள், விழாக்கள் நடக்காது, படத்துக்கான எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும். புதிய படங்கள் ரிலீசாகாது என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வேலைநிறுத்தம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், படப்பிடிப்புகள், பட வேலைகளை நிறுத்தக் கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடந்தால், தமிழ் சினிமா துறையின் நிலை என்ன ஆகும்? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
இந்த வருடத்தில் முதல் ஆறு மாதங்களில் 115 படங்கள் திரைக்கு வந்தன. அதில் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை தந்தது வெறும் 4 படங்கள்தான். மீதி 111 படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது. அதே சமயம், வேலை நிறுத்தம் நடந்தால் தமிழ் சினிமாத்துறை முடங்கும், அதனால் தொழிலாளர்கள் வேலையில்லாத சூழலை சந்திப்பார்கள். எனவே அதை தவிர்க்க வேண்டும் என நடிகர் சங்கம் கூறுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.
நடிகர்களின் சம்பளத்தை தயாரிப்பாளர்கள்தான் தீர்மானித்து தருகிறார்கள். அவர்களே வேலை நிறுத்தம் செய்வது முரணாக இருப்பதாக திரைத்துறையை சேர்ந்த சிலர் கூறுகிறார்கள். அதே சமயம், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க முன்வருவதில்லை, ஏகப்பட்ட வீண் செலவுகளையும் வைக்கிறார்கள் என்றும் ஒரு தரப்பு சொல்கிறது. இதனிடையே நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது. அதன் மீது கலந்தாலோசனைக்கு பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, ஒரு அறிக்கை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
The post காஸ்ட்டிங் ஏஜென்ட் கமல்ஹாசன் எச்சரிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.