திருவெறும்பூர், ஜூலை 19: திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைகலன் தொழிற்சாலையான எச் இ பி எப் தொழிற்சாலை வேலை பார்த்து வரும் ஊழியர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் நேரத்தில் 5 சதவீதத்தை தன்னிச்சையாக குறைத்த எச் இ பி எப் நிர்வாகம் மற்றும் எம் ஐ எல் நிர்வாகத்தை கண்டித்து எச் இ பி எப் தொழிற்சாலை ஊழியர்கள் ஆலையின் முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எம்ப்ளாய்ஸ் யூனியன் உதவி தலைவர் சத்தியவாகிசன் தலைமை வைத்தார். பொதுச் செயலாளர் இரணியன் முன்னிலை வைத்ததார்.
இந்த போராட்டத்தில் எச்இபிஎப் நிர்வாகம் மற்றும் எம் ஐ எல் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் நிர்வாகம் தன்னிச்சையாக நிரந்தர பணியாளர்களின் உற்பத்தி நேரத்தில் 5 சதவீதத்தை குறைத்ததை திரும்ப பெறவில்லை என்றால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 78வது சுதந்திர தினமாக நாடு கொண்டாடி விரும் நிலையில் கால வரையறை அற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் எம்ப்ளாயீஸ் யூனியன் தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
The post பணியாளர்கள் குறைத்ததை கண்டித்து எச்இபிஎப் தொழிற்சாலை தொழிற்சங்கத்தினர் மனிதசங்கிலி appeared first on Dinakaran.
