×

திருச்சி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் 4,370 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை

திருச்சி,டிச.13: திருச்சி கலையரங்கில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்க விழாவில் 4,370 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வங்கி பற்று அட்டைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமை ச்சர் அன்பில் மகேஷ் வழங்கி ேநற்று தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை. நேரு உள்விளையாட்டரங்கத்தில், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்ட விழா நடைபெற்றது.

இவ்விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து, 10 மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கிய நிகழ்ச்சி திருச்சி கலையரங்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மகளிருக்கான ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, மகத்தான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27.03.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் முதல் கட்டமாக சுமார் 1.13 கோடி பயனாளிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

பெண்களின் உழை ப்பை அங்கீகரிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில் மகளிர்க்கு உரிமைத்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்க விழாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 48,994 பயனாளிகளுக்கு வழங்கிடும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் 4,370 பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் சரவணன், மாநராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், எம்எல்ஏக்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி தியாகராஜன், ரங்கம்பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Trichy Kalaiyarang ,Trichy ,Municipal Administration Minister ,K.N. Nehru ,School Education Minister ,Anbil Mahesh ,Kalaiyarang ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்