×

துவரங்குறிச்சியில் சோனியாகாந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

 

துவரங்குறிச்சி, டிச.10: சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மருங்காபுரி வட்டார தலைவர் தமிழரசன் முன்னிலையில் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மேலும் சோனியா காந்தியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அனைவரும் பணியாற்றி வெற்றி வாய்ப்பை பெற வேண்டும் எனவும் நிர்வாகிகள் கூறினர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரமேஷ் குமார், வையம்பட்டி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வித்யா ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டார். இளைஞர் காங்கிரஸ் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் அல்லிமுத்து, சுப்பையா, மாறன், கிருஷ்ணமூர்த்தி, குருநாதன், ராசு மேஸ்திரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Soniakanti ,Transrankurichi Thuraranguchi ,Transdanurichi ,station ,Sonia Gandhi ,Marungapuri ,Trichchi Southern District Congress Committee ,Congress ,Senior Leader ,
× RELATED கட்டுமான பொருட்கள் திருடிய 3 பேர் கைது