×

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது

கரூர், ஜூலை 17: கரூர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கம் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், 2025ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். < https://tinyurl.com/Panchayataward > (அல்லது) < https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/Samooga_Nallinakka_Ooraatchi_Award_ > Application என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தெரிவித்துள்ளார்.

The post சமூக நல்லிணக்க ஊராட்சி விருது appeared first on Dinakaran.

Tags : Karur ,Government of Tamil Nadu ,District ,Tangvel ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...