×

சுகாதாரமற்ற நிழலகத்தால் பயணிகள் அவதி

 

கரூர், டிச. 10: கரூர் நாமக்கல் இடையே பைபாஸ் சாலையில் நிழற்குடைகளைஅமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் இருந்து தவிட்டுப்பாளையம் வரை பைபாஸ் சாலை மாவட்டப் பகுதியில் உள்ளன. இந்நிலையில், தளவாபாளையம், செங்காட்டனுர் போன்ற பல்வேறு பகுதிகளில் உட்கிராம பகுதிகளில் இருந்து மக்கள் பைபாஸ் சாலைக்கு வந்து பல்வேறு பேரூந்துகளில் ஏறிச் செல்லும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டும் பயன்பாட்டில் உள்ளது. இதில், பெரும்பாலான நிழற்குடைகள், அதிக பயன்பாடு காரணமாக பழுதடைந்தும், அசுத்தமாகவும் உள்ளது. இதனால், தற்போதைய நிலையில், பைபாஸ் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், கிராம மக்களும் இதனை பயன்படுத்திட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

Tags : Karur ,Namakkal ,Manmangalam ,Thavittpalayam ,Karur district ,Thalavapalayam ,Sengattanur… ,
× RELATED கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு