×

போதிய விழிப்புணர்வு இல்லாதால் அமராவதி ஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

கரூர், டிச.12: போதிய விழிப்புணர்வு இல்லாதால் அமராவதி ஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் துவங்கி கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு கலக்கிறது. இதில், கருர் மாநகரில் அமராவதி ஆறு ஆண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளின் வழியாக திருமுக்கூடலூர் நோக்கிச் செல்கிறது.

கரூர் மாநகரின் வழியாக அமராவதி ஆறு பயணிக்கும் நிலையில், மாநகராட்சியின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றங்கரையின் சில பகுதிகளில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக, ஆற்றின் தன்மையும் வெகுவாக பாதிப்படை அடைந்து வருகிறது. எனவே, இந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Amaravathi river ,Karur ,Tiruppur district ,Cauvery river ,Thirumukudalur ,
× RELATED அடையாளம் தெரியாத நபர் தற்கொலை